ஓடும் காரில் தீ பற்றி 4 பேர் பலி
விருதுநகர்: புதுக்கோட்டை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தீ பற்றி 4 பேர் கருகி பலியானார்கள். புது்க்கோட்டை அருகே அன்னவாசலில் நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீப்பற்றியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்ந்த 4 பேர் பலியானார்கள். பலியானவர்களில் விருதுநகர் மாவட்டம் நல்லமபட்டியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ரவி மற்றும் அவரது மனைவி குமாரி மற்றும் இவர்களது 2 பெண் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. மனைவி குமாரியும் அரசு பள்ளி ஆசிரியர் ஆவார்.இவர்கள் வெளியூர் சென்று விட்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளி திறப்பதையொட்டி ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.இந்நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment