Search This Blog

Sunday, 9 June 2013

மக்களை முட்டாளாக்குகிறது காங்,' - மோடி விளாசல் பேச்சு

‘ மக்களை முட்டாளாக்குகிறது காங்,' - மோடி விளாசல் பேச்சு



 
 




அவர் மேடையில் பேசுகையில்: கட்சியில் எனக்கு மிக பெரிய பொறுப்பு வழங்கியிருக்கிறீர்கள். எனக்கு இந்த பதவி கொடுத்துள்ள தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து எந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவா முதல்வர் பாரிக்கருக்கும் நன்றி. சாதாரண தொண்டர்கள் முதல் அனைவரும் எனக்கு இந்த பொறுப்பு தந்துள்ளீர்கள். வழங்கப்பட்ட இந்த பணியை வெற்றிகரமாக செவ்வனே செய்வேன். ஆளும் காங்கிரஸ் அரசு இந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பல செய்ததாக பாரத்நிர்மான் என்று தம்பட்டம் அடித்து மக்களை முட்டாளாக்குகிறது.

இந்திய வளர்ச்சியின்மை மக்களுக்கு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு முன்னேற்றத்தையும் மனதில் கொள்ளும் நிலையில் காங்கிரஸ் இல்லை. மக்கள் காங்கிரசை நம்ப தயாராக இல்லை. சி.பி.ஐ., மூலம் காங்கிரஸ் மிரட்டி வருகிறது. காங்கிரஸ் அமைப்பு பலவீனமாகி விட்டது. நாட்டின் திட்டக்கமிஷன் ரப்பர் ஸ்டாம்பாக உள்ளது. பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளை சுப்ரீம் கோர்ட் தலையிட்டு மாற்றியிருக்கிறது. ஜி.கே., பிள்ளை மத்திய உள்துறை செயலராக இருந்த போது நாங்கள் நக்சலிசத்தை ஒடுக்கினோம்.

ஒரு கோடி பேருக்கு வேலை என்னாச்சு ?ஒரு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று காங்., சொல்லியது. செய்தார்களா? தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆளும் அரசில் 80 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். ஆனால் காங்., கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் 20 சத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. காங்., முதல்வர்கள், தலைவர்கள் என அனைவரும் ஊழலில் சிக்கியுள்ளனர். மாவோ., நக்சல் ஒழிக்க மத்திய அரசு தவறி விட்டது. சர்வதேச கூட்டம் ஒன்றில் வெளியுறவு துறை அமைச்சர் ஒருவர் மற்ற நாட்டின் உரையை படித்தார். 


ராஜ்பவன் காங்., பவனாக மாறியது : காங்கிரஸ் ஆட்சியில் ராஜ்பவன் காங்., பவனாக மாறுகிறது. பல்வேறு கொள்கை குழப்பங்களில் காங்கிரஸ் சிக்கி தவிக்கிறது.


நாங்கள் அதிகாரத்தை விரும்பவில்லை: நாங்கள் யாரும் அதிகாரத்தை விரும்பிடவில்லை. வளர்ச்சி பணியை தான் கருத்தில் கொண்டுள்ளோம். காங்கிரஸ்சிடமிருந்து இந்த நாட்டை நாம் மீட்க வேண்டிய நிலையில் உள்ளோம். குஜராத் மாநிலம் சீனாவுக்கு போட்டியாக இருக்கிறது. வாஜ்பாய் துவக்கிய பணிகளை நாம் இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது. காங்கிரசிடம் இருந்து இந்த நாடு மீட்கப்பட வேண்டும். பாரத் மாதாக்கி ஜே., பாரத் மாதக்கி ஜே., வந்தே மாதரம் என உரக்க கூறியபடி பேச்சை நிறைவு செய்தார்

No comments:

Post a Comment