Search This Blog

Thursday, 6 June 2013

காவிரி நீர் சம்பந்தமாக பெங்களூரு விதான் சவுதாவில் 


காவிரி நீர் சம்பந்தமாக பெங்களூரு விதான் சவுதாவில் 

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க.,வின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.குமார்பாண்டியன். குற்றால நகராட்சியின் கவுன்சிலராகவும் உள்ளார்.
நெல்லை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுற்றுலா துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு குமார்பாண்டியன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அண்மையில் கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்டங்கள் மாற்றப்பட்டு மாநகர், புறநகர் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. குமார்பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். சங்கரன்கோவிலில் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மேலநீலிதநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் முருகையா தரப்பினருக்கும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.,முத்துசெல்வி தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக முத்துசெல்வி போலீசில் புகார் செய்தார்.
பெண் என்றும் பாராமல் திட்டியதாக முத்துசெல்வி தந்த புகார் குறித்து கட்சியின் மேலிடம் விசாரணை நடத்தியது.
விசாரணையில், அந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமார்பாண்டியன், ஒன்றிய செயலாளர் முருகையாவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என தெரியவந்ததால் இருவரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து நடவடிக்கை..!
குற்றாலத்தை அடுத்துள்ள இலஞ்சியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் இலஞ்சி குமாரர் கோயிலுக்கு சொந்தமான 73 சென்ட் நிலத்தை குத்தகைக்கு பெற்று பயிரிட்டுவந்தார்.
அவசர தேவைக்காக குமார்பாண்டியனிடம் நில ஆவணங்களை கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கொடுக்கும்போது நிலத்திற்குரிய ஆவணங்களை தரவேண்டும் என பேசியுள்ளார். அண்மையில் பணத்தை திரும்ப கொடுத்தபோது, நிலத்தை தரமுடியாது என குமார்பாண்டியன் மறுத்துவிட்டாராம். இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு சுப்பையா, புகார் மனுஅனுப்பியிருந்தாராம். இதுவரையிலும் அந்த மனுமீது நடவடிக்கை இல்லாமல் இருந்தது.
குற்றாலத்தில் மதுரை, நெல்லை தி.மு.க.,பிரமுகர்கள், கடந்த ஆட்சியின்போது பங்களாக்கள் வாங்குவதற்கு உதவியதாகவும், தி.மு.க.,பிரமுகர்களுடன் குமார்பாண்டியன் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் அவருக்கு எதிரான அ.தி.மு.க., கோஷ்டியினரே மேலிடத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த புகார் மீதான விசாரணையில்தான் குமார்பாண்டியன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு சேர்ந்து தற்போது நிலத்தை அபகரித்து வழக்கிலும் சிக்கியுள்ளார்.
சுப்பையாவின் புகாரின் பேரில், நெல்லை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துகுமார் விசாரணை நடத்தினார். குமார்பாண்டியன் மீது 341, 294 பி, 355, 447, 384, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். குற்றாலத்தில் வசிக்கும் அவரை இரவில் அழைத்துவந்து விசாரித்தனர். தேவைப்பட்டால் விசாரணைக்கு வரவேண்டும் என அனுப்பிவைத்ததாக தெரிகிறது.
மாவட்ட செயலாளராக இருந்தவர் ஒரே நாளில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

No comments:

Post a Comment