Search This Blog

Saturday, 31 August 2013

எல்.ஐ.சி., நிறுவனத்தின்ஆண்டு விழா கோலாகலம்

எல்.ஐ.சி., நிறுவனத்தின்ஆண்டு விழா கோலாகலம்

சென்னை:லைப் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் (எல்.ஐ.சி.,), 57வது ஆண்டு விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இது குறித்து இந்நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் ஜெம்மா பெர்லி வெளியிட்டுள்ள அறிக்கை:ஆயுள் காப்பீட்டு துறையில், பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் எல்.ஐ.சி., தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு உள்ளது.இந்நிறுவனம், கடந்த 2012-13ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த அளவில், 367.82 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.
புதிய பாலிசிகள் விற்பனையில், 83.24 சதவீத பங்களிப்பையும், முதல் பிரிமிய வருவாயில், 71.25 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.மேலும், குழு ஓய்வூதிய திட்டங்களில், 304.61 லட்சம் பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டங்களில், 132.24 லட்சம் பேருக்கும் ஆயுள் காப்பீடு வழங்கியுள்ளது.வறுமை ஒழிப்பு, கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட சமூக பொறுப்பின் பங்களிப்பிற்காக, நிறுவனம், தொண்டு அமைப்புகள் வாயிலாக, 262 திட்டங்களுக்கு, 38.65 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment