Search This Blog

Tuesday, 24 September 2013

அரிசி உற்பத்தி 92.32 மில்லியன் டன்னாக குறையும்!

அரிசி உற்பத்தி 92.32 மில்லியன் டன்னாக குறையும்!

புதுடில்லி : நடப்பாண்டில் அரிசி உற்பத்தி 92.32 மில்லியன் டன்னாக குறையும் என மத்திய வேளாண்துறை கமிஷனர் ஜே.எஸ்.சாந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, நடப்பாண்டில், பருவமழை மிதமாகத்தான் பெய்துள்ளது. குறிப்பாக பீகார், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவு குறைவாகத்தான் உள்ளது. இதனால் கரீப் பருவத்தில் நெல் விளைச்சல் கடந்தாண்டை காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும். இந்தாண்டு நெல் விளைச்சல் 92.32 மில்லியன் டன் என்ற அளவிலேயே இருக்கும். கடந்தாண்டு இது 92.76 மில்லியன் டன்னாக இருந்தது. அதேசமயம் நடப்பாண்டில் மொத்த உணவுதாணிய உற்பத்தி 129.32 மில்லியன் டன்னாக இருக்கும் என்றார்.

மேலும் சோளம் பயிரின் விளைச்சல் 17.78 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்றும், கடந்தாண்டு இது 16.04 மில்லியன் டன்னாக இருந்தது என்றும், அவரை, மொச்சை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் 6.01 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் இது கடந்தாண்டு 5.91 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment