டீசல், காஸ் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு யோசனை: பெட்ரோல் விலையை குறைத்து அதிருப்தியை சமாளிக்க திட்டம்
புதுடில்லி: டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தால், ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க, அவற்றின் விலையை கடுமையாக உயர்த்த, மத்திய அரசு யோசித்து வருகிறது. அதேநேரத்தில், இந்த விலை உயர்வால் ஏற்படும் அதிருப்தியை சமாளிக்க, பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 1 ரூபாய் குறைக்க திட்டமிட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண் ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ள, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, சில மாதங்களுக்கு முன், அனுமதி வழங்கப்பட்டு விட்டதால், அதற்கேற்ற வகையில், பெட்ரோல் விலையை, அவ்வப்போது, அந்த நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால், டீசல் விலையை மட்டும், மாதம் ஒரு முறை, லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்த, அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், சமீப நாட்களில், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு, மத்திய அரசு அளிக்கும்
மானியச் சுமை கடுமையாக அதிகரித்தது.
நிதி நெருக்கடி:@@
இதனால், பெரும் நிதி நெருக்கடியை மத்திய அரசுசந்தித்து வருகிறது.இந்த
சூழ்நிலையில், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும்
மானியத்தை குறைக்கா விட்டால், நிலைமை மோசமாகி விடும் என, பெட்ரோலியத் துறை
அமைச்சர் வீரப்ப மொய்லி, சமீபத்தில், பிரதமரிடமும், நிதி அமைச்சரிடமும் முறையிட்டார். அதனால், டீசல் மற்றும் காஸ் விலையை உயர்த்தும் அறிவிப்பு, எந்த நேரத்திலும் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியானால், மக்கள் மத்தியில், பெரும் அதிருப்தி உருவாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அந்த அதிருப்தியை சமாளிப்பதற்காக, பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்பு முதலில் வரவிருக்கிறது. வரும், 15ம் தேதி அல்லது 16ம் தேதி, பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வரும். அதைத் தொடர்ந்து, உடனடியாக, டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளிவர இருக்கிறது.
டீசல் விலையும் உயரும்: @@டீசல் விலையை பொறுத்தமட்டில், லிட்டருக்கு, 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்பு
உள்ளது. காஸ் விலை சிலிண்டருக்கு, 50 ரூபாய்வரை உயர்த்தப்படலாம். டீசலுக்கு அளிக்கப்படும் மானியத்தால், லிட்டருக்கு, 10.22 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை செயலர் விவேக் ரே கூறியதாவது: பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1 முதல் 1.50 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது. ஒரு தடவை மட்டுமே உயர்த்தப்படும், டீசல் மற்றும் காஸ் விலை குறித்து, ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். டீசல் மற்றும் காஸ் விலையானது, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment