Search This Blog

Tuesday, 3 September 2013

நிலக்கரி ஊழல் வழக்கு:சம்பந்தமில்லாத ஆவணங்களை கொடுத்து அரசு ஏமாற்றுகிறது-சிபிஐ குற்றச்சாட்டு

நிலக்கரி ஊழல் வழக்கு:சம்பந்தமில்லாத ஆவணங்களை கொடுத்து அரசு ஏமாற்றுகிறது-சிபிஐ குற்றச்சாட்டு

புதுடில்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் விசாரணை குழுவிடம் வழக்கிற்கு சம்பந்தமில்லாத ஆவணங்களை அளித்து நிலக்கரித்துறை அமைச்சகம் ஏமாற்றுவதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. நிலக்கரித்துறை அமைச்சகம் சம்பந்தமில்லாத 12 ஆவணங்களை சிபிஐ.,க்கு அளித்துள்ளதாக அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியிடம் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நிலக்கரி ஊழல் : @@நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றிருப்பதாக சிஏஜி அளித்த அறிக்கையால் கடந்த பார்லி., கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கை விசாரிக்க சிபிஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான ஆடணங்கள் தொலைந்து விட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் முறையிட்ட சிபிஐ, காணாமல் போன ஆவணங்களின் பட்டியலையும் அளித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சில ஆவணங்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக நிலக்கரித்துறை அமைச்சகம் சிபிஐ.,யிடம் ஒப்படைத்தது.

சிபிஐ அறிக்கை : @@நிலக்கரி அமைச்சகம் வழங்கிய 12 ஆவணங்களில் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான எந்த விபங்களும் இல்லை என சிபிஐ தரப்பில் அட்டர்னி ஜெனரலிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி ஒதுக்கீட்டிற்கு முன்னர் நிலக்கரித்துறையில் நடைபெற்ற பணிகள் குறித்த விபரமும் இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 29 கோப்புக்களும் அது தொடர்பான ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. சிபிஐ அறிக்கை தொடர்பாக வாகன்வதி, நிலக்கரி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அதில் சுப்ரீம் கோர்ட் ஆகஸ்ட் 29ம் தேதி 5 நாட்களுக்குள் காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. விசாரணைக்குழு கேட்கும் ஆவணங்களை நிலக்கரி அமைச்சகம் வழங்காதது சரியானதல்ல என தெரிவித்துள்ளார்.

கோர்ட் உத்தரவு : @@காணாமல் போன ஆவணங்கள் பற்றிய விபரங்களை 2 வாரங்களுக்குள் நிலக்கரி அமைச்சகம் சமர்ப்பிக்க வேண்டும்; அவ்வாறு வழங்காவிட்டால் விசாரணைக் குழுவால் அமைச்சகம் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்; வழக்கு விசாரணைக்கு 225 ஆவணங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் இதுவரை 12 ஆவணங்கள் மட்டுமே சிபிஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; இதிலும் குளறுபடி நடைபெற்றுது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment