Search This Blog

Tuesday, 3 September 2013

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகும் ராஞ்சனா பட நாயகி சோனம்கபூர்!

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகும் ராஞ்சனா பட நாயகி சோனம்கபூர்!

தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சோனம் கபூர். இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான இவர், ராஞ்சனா படத்திற்கு பிறகு தொடர்ந்து தனுசுடன் நடிக்க விரும்பினார். அவர் மூலமாக தமிழிலும் வந்து கொடி நாட்ட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால், அவரது வடக்கத்திய முகம் தென்னிந்திய சினிமாவுக்கு எடுபடாது என்று கருதி எந்த தமிழ் இயக்குனரும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.

இருப்பினும், தனுஷ் தனது புதிய தமிழ் படங்களில் நடிக்க தன்னை அழைப்பார் என்று எதிர்பார்த்தார் சோனம்கபூர். ஆனால் அனேகன் படத்துக்குகூட அமீரா என்ற வேறொரு இந்தி நடிகையை அவர் புக் பண்ணியதால், தமிழை அதிகமாக நம்பாமல் தெலுங்கு, கன்னடம் என்று முயற்சி எடுத்தார். அந்த முயற்சியின் பலனாக தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் படவாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாம்.

அதனால், இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவரான சோனம்கபூர், இப்போது தெலுங்கு வார்த்தைகளின் அர்த்தங்களையும் ஒரு ஆசிரியரை நியமித்து தெரிந்து கொண்டு வருகிறாராம். சோனம் கபூரின் இந்த ஆர்வம் மகேஷ்பாபுவுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளதாம். அதனால் அடுத்தடுத்து தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்றும் அவரை கேட்டுக்கொண்டுள்ளாராம்.

No comments:

Post a Comment