தகுதிச் சுற்றில் ஸ்பெயின் வெற்றி
ஹெல்சின்கி:பின்லாந்துக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.
பிரேசிலில், அடுத்த ஆண்டு ஆண்களுக்கான "பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் (2014, ஜூலை 12 - ஜூலை 13) நடக்கவுள்ளது. இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஓசியானா, தென் அமெரிக்கா, வடக்கு/மத்திய அமெரிக்கா அண்டு கரீபியன் என 6 பிரிவுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.
ஐரோப்பிய பிரிவில், 53 அணிகள் ஒன்பது பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. "ஐ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்பெயின், பின்லாந்து அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயின் சார்பில் ஜோர்டி ஆல்பா (19வது நிமிடம்), ஆல்வரோ (86வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
"ஏ பிரிவில் நடந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. செர்பியா, குரோஷியா அணிகள் மோதிய மற்றொரு "ஏ பிரிவு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா ஆனது.
No comments:
Post a Comment