ஒலிம்பிக் மகாயுத்தம்: வெல்லுமா மல்யுத்தம்: முந்துகிறது ஸ்குவாஷ
பியுனஸ் ஏர்ஸ்:வரும் 2020ல் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் இடம் பெறுவதில் மல்யுத்தம், ஸ்குவாஷ் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. தற்போதைக்கு ஸ்குவாஷ் போட்டிக்கு அமோக ஆதரவு உள்ளது. இன்று நடக்கும் ஓட்டெடுப்பில் மல்யுத்தத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.
நவீன ஒலிம்பிக் துவக்கப்பட்டது (1896) முதல், இடம் பெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு மல்யுத்தம். இதில், இந்தியாவின் கை எப்போதுமே ஓங்கி இருக்கும். கடந்த 1952, ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் ஜாதவ் வெண்கலம் வென்றார். 2008, பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி கைப்பற்றினார். தவிர, இதே போட்டியில் யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்றார்.
மும்முனை போட்டி:இதனிடையே, போதிய வரவேற்பில்லை என்ற காரணத்துக்காக, 2020 ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்தம் நீக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) அறிவித்தது. இதற்கு உலகளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், மல்யுத்தத்தை மீண்டும் சேர்க்க ஏற்பாடுகள் நடந்தன. ஓட்டெடுப்பு மூலம் மல்யுத்தம், ஸ்குவாஷ், பேஸ்பால்/சாப்ட்பால் ஆகிய மூன்று போட்டிகளில் ஏதாவது ஒன்று தேர்வு செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
அடுத்த தலைவர்:இந்த பரபரப்பான சூழலில் ஐ.ஓ.சி., பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நேற்று துவங்கியது. இதில், ஓய்வு பெறும் ஜாக்ஸ் ரோகிக்கு பதில் அடுத்த ஐ.ஓ.சி., தலைவர், 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு, புதிய போட்டியை தேர்வு செய்வது போன்ற முக்கிய முடிவுகள் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட உள்ளன. மல்யுத்தம் மீண்டும் இடம் பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், ஸ்குவாஷ் போட்டிக்கு திடீரென ஆதரவு அதிகரிக்க, புது சிக்கல் ஏற்பட்டுள்ளது
எளிய போட்டி:இதுகுறித்து உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு (டபிள்யு.எஸ்.எப்.,) பிரதிநிதி ராமச்சந்திரன் கூறியது:
ஒலிம்பிக்கில் இடம் பெற ஸ்குவாஷ் போட்டி, நீண்ட காலமாக போராடி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக இதற்காக கடினமாக முயற்சிக்கிறோம். இப்போட்டியை நடத்த குறைந்த செலவு தான் ஆகும். மொத்தம் 64 பேர் மட்டும் பங்கேற்பதால், எளிதாக நடத்திவிடலாம்.
மொத்தம் 185 நாடுகளில் பல லட்சம் பேர் விளையாடுகின்றனர். அமெரிக்கா தென் அமெரிக்கா, மத்திய ஐரோப்பா, இந்தியா மற்றும் சீனா நாடுகளில் பெரியளவில் வளர்ந்து வருகிறது. இன்று நடக்கும் ஓட்டெடுப்பில், இதை எடுத்து கூறுவோம்.
இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.
பல புதுமை:உலக ஸ்குவாஷ் ஓபன் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் சாரா பிட்ஸ்-ஜெரால்டு கூறுகையில்,"" ஸ்குவாஷ் போட்டிகளில் சமீபகாலமாக அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை, முழுவதும் கண்ணாடியால் ஆன மைதானங்கள்
No comments:
Post a Comment