Search This Blog

Monday, 23 September 2013

மாட்டுவண்டியில் சுற்றுலா:ஜார்கண்ட் அரசு ஏற்பாடு

மாட்டுவண்டியில் சுற்றுலா:ஜார்கண்ட் அரசு ஏற்பாடு

ஜம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள அமதுபி கிராமம். இக்கிராமத்தில் ஓவியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். மர பட்டைகளிலும், இலைகளிலும், பாரம்பரியமான, அற்புதமான ஓவியங்களை வரைவதில் இவர்கள் கை‌தேர்ந்தவர்கள். இந்த ஓவியங்களை காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி பயணங்களை மாநில சுற்றுலா வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம், இந்திய கிராமங்களின் சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவிக்க முடியும். கிராம மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படும்

No comments:

Post a Comment