‘ ஆம் எனக்கு சம உரிமை உண்டு ’- கனிமொழி
புதுடில்லி: உணவு பாதுகாப்பு மசோதா குறித்த ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் கனிமொழி பேச முன்வந்த போது கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்நேரத்தில் அ.தி.மு.க., உறுப்பினர் இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார், இதனால் கனிமொழி பேச முடியாத அளவிற்கு கூச்சல் ஏற்பட்டது.
இதற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கடும் ஆவேசமாக தமிழக அரசு குறித்து விமர்சித்தார். நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் அரிசிக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்பதை மறக்க வேண்டாம் என்றார்.
கனிமொழி பேச வாருங்கள் என அவைத்தலைவர் அழைத்த போது மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது தலைவர் மதிப்பிற்குரிய பெண் உறுப்பினர் பேசும் போது யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என்றார். அப்போது எழுந்த கனிமொழி தலைவர் அவர்களே நான் பெண் என்பதால் என்னை பேச விடாமல் இடையூறு செய்கின்றனர். என்றார் அதற்கு தலைவர் குரியன் , ஆம் உங்களுக்கு சம உரிமை உண்டு பேசுங்கள் என்றார். ஆம் எனக்கும் சம உரிமை உண்டு என்று கனிமொழியும் கூறினார்.
ஒருங்கிணைந்த ரேசன் கார்டு: @@தொடர்ந்து கனிமொழி பேசுகையில் : தமிழகத்திற்கு இந்த திட்டத்தினால் நன்மை கிடைக்கும் என்பதால் தி.மு.க, இந்த திட்டத்தை வரவேற்கிறது. ஊட்டச்சத்து குறைவானவர்கள் பயன்பெறுவர். பல நாடுகளில் பட்டினியால் பலர் வாடுகின்றனர். இதற்கு முன்னுதாரணமாக இந்தியாவில் இந்த சட்டம் கொண்டு வருவது பலருக்கும் நன்மை பயக்கும்.
இது அனைவருக்கும் தேவையான அடிப்படை உரிமையான உணவு கிடைக்கும் என்பதில் எனது தலைவரும் நானும் மிக்க சந்தோஷப்படுகிறோம். இது அனைவருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். 1996 ல் பொது விநியோக சட்டம் கொண்டு வந்த போது ஒருங்கிணைந்த ரேசன் கார்டு கொண்டு வந்தோம். ஆனால் தொடர்ந்து வந்த அ.தி.மு.க, ஆட்சியில் மக்களை பிரிக்கும் வகையில் மஞ்சள், பச்சை என்று பல வண்ணத்தில் ரேசன் கார்டு கொண்டு வந்தது. உணவு பாதுகாப்பு மசோதா அனைவருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment