Search This Blog

Saturday, 28 September 2013

இந்தியா ஏ அணி தோல்வி

இந்தியா ஏ அணி தோல்வி

மைசூர்:வெஸ்ட் இண்டீஸ் "ஏ அணிக்கு எதிராக, அதிகாரப்பூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா "ஏ அணி 162 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் "ஏ அணி, நான்கு நாட்கள் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் "ஏ 429, இந்தியா "ஏ 245 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் "ஏ அணி 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தது.
நேற்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கோடு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்தியா "ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் "ஏ பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. "டாப்-ஆர்டரில் களமிறங்கிய லோகேஷ் ராகுல் (9), ஜிவான்ஜோத் சிங் (24), கேப்டன் புஜாரா (17) ஏமாற்றினர். "மிடில்-ஆர்டரில் வந்த ரோகித் மோத்வானி (11), ஹர்ஷாத் கடிவாலே (2) சொற்ப ரன்னில் வெளியேறினர். பொறுப்பாக ஆடிய மன்பிரீத் ஜுனெஜா (70) ஆறுதல் அளித்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா "ஏ 152 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் "ஏ அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் வரும் அக்., 2-5ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment