சாலஞ்சர் டிராபி: பைனலில் டில்லி அணி: உன்முக்த் சந்த் சதம்
இந்தூர்:சாலஞ்சர் டிராபி தொடரின் பைனலுக்கு, விராத் கோஹ்லி தலைமையிலான டில்லி அணி முன்னேறியது. நேற்று நடந்த இந்தியா "ரெட் அணிக்கு எதிரான லீக் போட்டியில், உன்முக்த் சந்த் சதம் அடித்து கைகொடுக்க, டில்லி அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
உள்ளூர் தொடர்களில் ஒன்றான, என்.கே.பி. சால்வே சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தூரில் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், இந்தியா "ரெட், டில்லி அணிகள் மோதின. "டாஸ் வென்ற இந்தியா "ரெட் அணி கேப்டன் யூசுப் பதான், "பீல்டிங் தேர்வு செய்தார்.
உன்முக்த் அபாரம்:டில்லி அணிக்கு காம்பிர் (20) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கோஹ்லி(63) அரைசதம் கடந்தார். சேவக் (8) நிலைக்கவில்லை. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய உன்முக்த் சந்த், சதம் அடித்தார். மிலிந்த் குமார் 57 ரன்களில் வெளியேறினார். உன்முக்த் சந்த் 119 ரன்கள் (3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து, அபிமன்யு மிதுன் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
டில்லி அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ரஜத் பாட்யா (40) அவுட்டாகாமல் இருந்தார்.
வருண் துல்லியம்:
கடின இலக்கை விரட்டிய இந்தியா "ரெட் அணிக்கு ராபின்
இந்த வெற்றியின் மூலம் டில்லி அணி, பைனலுக்கு முன்னேறியது. அடுத்தடுத்து இரண்டு தோல்வி கண்ட இந்தியா "ரெட் அணி வெளியேறியது. இன்று நடக்கவுள்ள பைனலில், இந்தியா "புளூ, டில்லி அணிகள் மோதுகின்றன.
No comments:
Post a Comment