தீபாவளி சிறப்பு பேருந்து: ரூ.2 கோடிக்கு டிக்கெட் முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த சிறப்புப் பேருந்துகளுக்கு இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருகிற நவம்பர் 2 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து 8,350 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனையடுத்து சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. சிறப்பு கவுண்டர்களில் செய்யப்படுவதைவிட இணையதளம் (www.tnstc.in) மூலமாக அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 தினங்களில் மட்டும் இணையதளம் மூலம ரூ. 2 கோடி அளவுக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீபாவளிக்கு இன்னும் 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் மேலும் பல கோடி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: top, சிறப்பு பேருந்து, டிக்கெட், தீபாவளி, முன்பதிவு, ரூ.2 கோடி
No comments:
Post a Comment