Search This Blog

Friday, 18 October 2013

சுவிட்சர்லாந்து ஓபன் : விலகினார் நடால்

சுவிட்சர்லாந்து ஓபன் : விலகினார் நடால்

மாட்ரிட்:சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ஸ்பெயினின் நடால் விலகினார்.
ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால், 27. தரவரிøயில் முதலிடத்திலுள்ள இவர், இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இந்நிலையில், எதிர் வரும் (21-27ம் தேதி) சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,"" என் உடற்தகுதியில் சிறிது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், சுவிட்சர்லாந்து தொடரில் பங்கேற்க முடியாது, என்றார்,
கடந்த ஆண்டு, முழங்கால் காயத்தால் நடால் பாதிக்கப்பட்டார். இதன் பின் மீண்டும் கடந்த பிப்ரவரியில் களம் கண்ட இவர், பிரெஞ்ச், யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்றார். ஆனால், சமீபத்தில் நடந்த சீன ஓபன் (பைனல்), ஷாங்காய் மாஸ்டர்ஸ் (அரையிறுதி) தொடரில் தோல்வி கண்டார்.

No comments:

Post a Comment