Search This Blog

Tuesday, 29 October 2013

விஸ்வரூபம் – 2′ ட்ரெய்லர் ரெடி!: கமல் பிறந்த நாளில் பிரம்மாண்ட ரிலீஸ்

விஸ்வரூபம் – 2′ ட்ரெய்லர் ரெடி!: கமல் பிறந்த நாளில் பிரம்மாண்ட ரிலீஸ்

இந்த வருஷத்தோட இறுதிக்குள்ள ‘விஸ்வரூபம் – 2′ படத்தை கமல் ரிலீஸ் பண்ணி விடுவார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பித்து விட்டார் நடிகர் கமல்.

ஆமாம், வருகிற நவம்பர் 7- ஆம் தேதி கமல் பிறந்தநாளில் விஸ்வரூபம் – 2 படத்தின் ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக ரிலீசாகும் என்று தெரிகிறது.

பல சர்ச்சைகளுக்கிடையே கமலின் டைரக்‌ஷனில் தயாராகி வெற்றிபெற்ற படம் தான் ‘விஸ்வரூபம்’. அந்தப் படத்தின் தொடர்ச்சியான அவர் எடுத்து வந்த ‘விஸ்வரூபம் 2′ படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

இப்போது படத்தின் கடைசி கட்ட பணியில் இருக்கும் கமல் ‘விஸ்வரூபம் – 2′ படத்தை இந்த வருட கடைசியில் ரிலீஸ் செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் டிரெய்லரை தனது பிறந்தநாளில் ரிலீஸ் பண்ணியது போல ‘விஸ்வரூபம் – 2′ வின் டிரெய்லரையும் தனது பிறந்தநாளான அடுத்த மாதம் 7 – ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் கமல். தற்போது எடிட்டிங் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

அவரது பிறந்த நாளுக்கு முன்பு டிரெய்லர் தயாராகி விட்டால் கமல் பிறந்தநாளன்று டிரெய்லர் ரிலீஸ் ஆவதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் ‘விஸ்வரூபம் 2′ படக்குழுவில் உள்ளவர்கள்.

விஸ்வரூபடத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கமல் பிறந்தநாளன்று டிரெய்லர் ரிலீஸானாலும் மகிழ்ச்சியே என்பதில் சந்தேகமில்லை. ‘விஸ்வரூபம் 2′ படப்பிடிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய கமல்ஹாசன், தனது பிஸி ஷெட்யூல்களிலும் கூட புதிய டைரக்டர்களின் படங்களை பார்ப்பது, அவர்களின் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்துவது ஆகிய வேலைகளையும் செய்து வருகிறார்.

‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த அதே நட்சத்திரங்களை இந்தப்படத்திலும் களமிறக்குகிறார் கமல். முதல் படத்தில் அமெரிக்காவை சுற்றி வந்தவர் இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியாவை சுற்றுகிறாராம்.

எப்படியே படம் ரிலீசுக்கு முன்னாடி யாராவது ‘விஸ்வரூபம்’ எடுக்காம இருந்தா சரி…

Tags: கமல், ரிலீஸ், விஸ்வரூபம்

No comments:

Post a Comment