Search This Blog

Monday, 21 October 2013

கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் இன்று மனுதாக்கல்

கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் இன்று மனுதாக்கல்

இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்தாக அமெரிக்காவின் ‘‘அட்வன் போர்டு’’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘‘சீ மேன் கார்டு’’ என்ற பாதுகாப்பு கப்பலை, தூத்துக்குடி அருகே கடந்த 12–ந்தேதி கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அந்த கப்பலின் கேப்டன் டூட்னிக் வால்ஸ்சின், மாலுமிகள், பாதுகாவலர்கள் 35 பேரை ‘‘கியூ’’ பிரிவு போலீசார் கைது செய்தனர். கப்பலில் இருந்த 35 நவீன ரக துப்பாக்கிகள், 5 ஆயிரத்து 680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கப்பலுக்கு சட்ட விரோதமாக டீசல் விற்றதாக தூத்துக்குடியை சேர்ந்த மரிய அண்டன் விஜய் (வயது 28), செல்லம் (40), முருகேசன் (35), ரஞ்சித்குமார் (33), விஜய் (24) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கப்பல் ஊழியர்கள் 35 பேர் பாளை மத்திய ஜெயிலிலும், டீசல் சப்ளை செய்ததாக கைதான 5 பேர் ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனம் சார்பில் வக்கீல்கள் சிலர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜாமீன் மனு தாக்கல் செய்கின்றனர்.

அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா? அல்லது வேறு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுமா? என்பது இன்று மாலையே தெரிய வரும்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் சந்திப்பதற்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்று நெல்லை வருகின்றனர். அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து காரில் பாளை ஜெயிலுக்கு செல்ல உள்ளனர்.

No comments:

Post a Comment