Search This Blog

Wednesday, 16 October 2013

மொபைல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.88 கோடி

மொபைல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.88 கோடி

டில்லி : சென்ற செப்டம்பர் மாதம், தொலைத் தொடர்பு நிறுவனங்களின், ஜி.எஸ்.எம்., மொபைல்போன் சேவையை, 44 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்று உள்ளனர். இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த மொபைல்போனன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67.88 கோடியாக உயர்ந்து உள்ளது.இதுகுறித்து, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்சென்ற செப்டம்பர் மாதம், ஜி.எஸ்.எம்., சேவையை, 44.10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். இது, இதற்கு முந்தைய மாதத்தை விட, 0.65 சதவீதம் வளர்ச்சியாகும்.இதன் மூலம், சென்ற செப்டம்பர் வரை, மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67.88 கோடியாக உயர்ந்து உள்ளது. மேற்கண்ட புள்ளிவிவரத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனங்களின் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்படவில்லை.

சென்ற செப்டம்பரில், ஐடியா செலுலார் நிறுவனம், 12.07 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 12.72 கோடியாக உயர்ந்து உள்ளது.இதே மாதத்தில், வோடபோன் நிறுவனம், 12.05 லட்சம் புதிய வாடிக்கையாளர்களுடன், அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை, 15.55 கோடியாக உயர்த்திக் கொண்டுள்ளது.ஏர்டெல் நிறுவனம், 11.6 லட்சம் புதிய இணைப்புகளுடன், அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை, 19.33 கோடியாக உயர்த்திக் கொண்டு, இத்துறையில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.

வீடியோகான்:ஏர்செல் மற்றும் யூனிநார் நிறுவனங்கள், முறையே, 6.4 லட்சம் மற்றும், 1 லட்சம் புதிய மொபைல்போன் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன.சென்ற செப்டம்பரில், வீடியோகான் நிறுவனத்தின் செல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை, 11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 32.40 லட்சமாக உயர்ந்துள்ளது. பொதுத் துறையை சேர்ந்த எம்.டி.என்.எல்., 90 ஆயிரம் சந்தாதாரர் களை இணைத்துக் கொண்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், பீ.எஸ்.என்.எல்., மற்றும் லுாப் நிறுவனங்களின் சந்தாதாரர் எண்ணிக்கை, மாற்றமின்றி உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment