Search This Blog

Wednesday, 16 October 2013

பஜாஜ் ஆட்டோவின் நிகரலாபம் ரூ.837.16 கோடி

பஜாஜ் ஆட்டோவின் நிகரலாபம் ரூ.837.16 கோடி

புதுடில்லி : நடப்பாண்டில் இரண்டாம் காலாண்டில் பஜாஜ் ஆட்டோவின் நிகரலாபம் ரூ.837.16 கோடியாக உள்ளது. வாகன விற்பனையில் இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோவும் ஒன்று. இந்நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ.837.16 கோடியாக உள்ளது. முன்னதாக கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.740.67 ‌கோடியாக இருந்தது.

பஜாஜ் நிறுவனத்தின் நிகர விற்பனையும் 5.07 சதவீதம் உயர்ந்து ரூ.5,061.49 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இது ரூ.4,817.07 கோடியாக இருந்தது.

இந்நிறுவனத்திற்கு ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் 26 சதவீதம் உயர்ந்து ரூ.2,125 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இது ரூ.1,686 கோடியாக இருந்தது.

மொத்தத்தில் முதல்அரையாண்டில் பஜாஜ் நிறுவனத்தின் நிகரலாபம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.1,575 கோடியாக இருக்கிறது

No comments:

Post a Comment