Search This Blog

Friday, 18 October 2013

தேசிய நெடுஞ்சாலை ஓட்டல்களில் சுகாதார சீர்கேடு : பல மடங்கு விலை உயர்வால் பயணிகள் பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலை ஓட்டல்களில் சுகாதார சீர்கேடு : பல மடங்கு விலை உயர்வால் பயணிகள் பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலை உணவகங்களில் உள்ள, சுகாதார சீர்கேட்டாலும், உணவு பொருட்களை, கூடுதல் விலைக்கு விற்பதாலும், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்கள், ஆட்சி மாறும் போது, ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது. இந்த ஓட்டல்கள் அனைத்தும், பஸ் பயணிகளை குறிவைத்தே துவங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஓட்டல்களிலும், குறிப்பிட்ட, அரசு பஸ்கள் நிறுத்த வேண்டும் என்ற, எழுதப்படாத சட்டம், தமிழகத்தில், அமல்படுத்தப்பட்டுள்ளது.தி.மு.க, ஆட்சியின் போது,
இந்த ஓட்டல்களுக்கு, ஓட்டல் உதயா, சூர்யா, அண்ணா என்று பெயர் பலகை வைத்து நடத்துகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஓட்டல் ஜே.ஜே., ஓட்டல் அம்மா,
ஜே., கிளாசிக் என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். அரசு போக்குவரத்து கழக
அதிகாரிகளின் உத்தரவின்படி, பஸ் டிரைவர்கள், குறிப்பிட்ட ஓட்டல்களில்
பஸ்சை, 15 முதல், 20 நிமிடங்கள் நிறுத்துகின்றனர்.
நீண்ட தூரத்திலிருந்து வரும் பயணிகள், ஓட்டலுக்குள்சென்று, உணவு பொருட்கள் வாங்கும் போது, நகரங்களில் உள்ள ஓட்டல் விலைகளை விட, இங்கு பல மடங்கு கூடுதலாக விற்பனை செய்வதைக் கண்டு, கலக்கம் அடைகின்றனர்.

வேறு வழியில்லாமல், சுகாதாரமற்ற உணவு பொருட்களை வாங்கி சாப்பிடும் நிலைக்கு,
பயணிகள் ஆளாக்கப்படுகின்றனர். இருப்பினும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், தங்களுக்கு தேவையானஉணவு வகைகளை, இலவசமாக சாப்பிடுகின்றனர்.ஓட்டல் நிர்வாகம்
தரப்பில், அவர்களுக்கு, கவனிப்பும் நடக்கிறது. இதனால், பயணிகளின்
பாதிப்புகள் பற்றி, அவர்கள் கவலைபடுவது இல்லை. மேலும், தேசிய
நெடுஞ்சாலையிலுள்ளஓட்டல்களில், கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை.

ஓட்டல்கள் அருகே, பயணம் செய்யும் போதே, தாளமுடியாத துர்நாற்றம் வீசுகிறது.அரசு, பயணிகளின் நலனைக் கருதி, தேசிய நெடுஞ்சாலைகளில், அம்மா உணவகங்கள் அல்லது அரசு சார்பில் ஓட்டல்களை திறந்து, சுகாதாரத்துடன், குறைந்த விலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment