Search This Blog

Friday, 18 October 2013

" தமிழர்களின் கனவு நிறைவேறும் ”- சென்னை வந்த நரேந்திர மோடி பேச்சு

" தமிழர்களின் கனவு நிறைவேறும் ”- சென்னை வந்த நரேந்திர மோடி பேச்சு

சென்னை: தமிழகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஒரு நாள் பயணமாகஇன்று (வெள்ளிக்கிழமை ) மதியம்வந்தார். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மோடிவருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல், 2:45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு மோடிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அவர் வந்த விமானம் பிற்பகல் 3. 12 மணிக்கு வந்து சேர்ந்தது. ஆமதாபாத்தில் இருந்து தனி விமான மூலம் வந்திறங்கிய மோடியை தமிழக பா.ஜ. நிர்வாகிகள்மாலை அணிவித்து வரவேற்றனர். .
விமான நிலையத்தில் மோடிபேசியதாவது:என்னை வரவேற்ற பா.ஜ.
நிர்வாகிகளுக்கும்கூடியுள்ள நண்பர்களுக்கு நன்றி, இன்று மீண்டும்
தமிழகம் வந்திருக்கிறேன். இம்முறை, திருச்சி கூட்டத்திற்கு தாங்கள் அளித்த
மகத்தான ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.

மீண்டும்
டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மாற்றம் தமிழகத்தில்
ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இதுபோன்ற நேரத்தில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் , நாங்கள் தமிழர்களின் கனவுகளை
நிறைவேற்றுவோம் என உறுதி கூறுகிறேன்.சமீபத்திய திருச்சி பேரணியை வெற்றி பெற செய்தது தமிழக மக்களையே சாரும்.
புயல் தாக்கவில்லை ஏன் ? ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக
தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால்,
பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை
ஏற்பட்டுவிட்டது. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது.
காங்கிரஸ் இல்லாத ஆட்சி வேண்டும் என்பதை மக்களின் விருப்பம். நாட்டு மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற பா.ஜ., தொண்டர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

தங்க புதையலை தேடும் அரசு : உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு
கோட்டையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 1000 டன் தங்க புதையலை
இன்றைக்கு மத்திய அரசு தோண்டிக் கொண்டிருக்கிறது.இதற்கு பதிலாக, சுவிஸ்
வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் பணத்தை இந்தியாவிற்கு
கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு மோடி பேசினார்.

விமான நிலையத்தில் இருந்து மோடி தி.நகரில் உள்ள, பா.ஜ., தமிழக அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ., தலைவர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். இங்கு கட்சி நிர்வாகிகள் கருத்துக்களை கேட்கிறார். தொடர்ந்து மோடி மாலை, 4:00 மணிக்கு, சென்னை பல்கலைக்கழக, நூற்றாண்டு விழா கலையரங்கிற்கு செல்கிறார். இங்கு நானி பால்கிவாலா அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம், மோடி வரும் பாதை, கமலாலயம், நூற்றாண்டு விழா கலையரங்கம் என, பல பகுதிகளிலும், போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மோடி வரும் பாதையில், வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய போலீசார், அனைத்து பகுதிளையும் சோதனையிட்டனர். கமலாலயத்தை சுற்றிலும் சோதனையிடப்பட்டன.

நகர் முழுவதும், அலர்ட் : மோடி பங்கேற்கும் விழா, முதலில், ராயப்பேட்டையில் உள்ள, மியூசிக் அகாடமியில் நடத்துவதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசாரின் அறிவுறுத்தல் படி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்திற்கு மாற்றப்பட்டது. விழா நடப்பதை முன்னிட்டு, நூற்றாண்டு விழா கலையஙகிற்கு ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரங்கை சுற்றிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, சென்னை நகர் முழுவதும், அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பிருந்தே, இரவு பகல் என்று பாராமல், போலீசார், கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள், புறநகர் பகுதிகளில் இருந்து, சென்னைக்குள் நுழையும் பகுதிகளில், போலீசார் வாகன சோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரில், லாட்ஜ்கள், விடுதிகளில் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மோடி வருகையை முன்னிட்டு, சென்னை முழுவதும், 5000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பில் இவரது வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment