Search This Blog

Wednesday, 2 October 2013

பெட்ரோல் பங்க்குகளில் எரிவாயு சிலிண்டர் வாங்கும் திட்டம்

பெட்ரோல் பங்க்குகளில் எரிவாயு சிலிண்டர் வாங்கும் திட்டம்

புதுடில்லி:பெட்ரோல் பங்க்குகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளதிட்டத்திற்குமத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்தது. இதன்முதற்கட்டமாக 5 கிலோ கொண்ட சிறிய சிலிண்டர்களில் , எரிவாயுக்களைடில்லி,மும்பை, உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நேரடியாக பெறலாம். இத்திட்டம் வரும்5-ம் தேதி முதல் துவங்குகிறது.மத்திய பெட்ராலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி பெங்களூரூவில் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.. தவிர காஸ்வீட்டு உபயோகத்திற்கான14 கிலோ காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜென்சிகளை மாற்றிக்கொள்ளும் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக30 நகரங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment