தங்கத்தாலான கழிவறை பேப்பர் ரோல் விற்பனைக்கு
அவுஸ்திரேலியாவில் தங்கத்தால் ஆன கழிவறை பேப்பர் ரோல் (Toilet Paper) விற்பனைக்கு தயாராகவுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ´டாய்லெட் பேப்பர் மென்´ .இது தற்போது ஓரே ஒரு தங்கத்திலான டாய்லெட் பேப்பர் ரோலை தயாரித்துள்ளது.
22 காரட் தங்கத்தை வைத்து தயார் செய்யப்பட்டுள்ள இந்த பேப்பர் ரோல் சுமார் 1,376,900 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்படவுள்ளது. தங்கத்தால் ஆனாலும் இதனை இலகுவாக பயன்படுத்தலாம் என்றும் இது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் தங்கத்தால் ஆன டாய்லெட் சீட்டுகள் தயாரிக்கப்பட்டதை பார்த்து தான் இதனை தயாரித்துள்ளதாகவும், இதனை வாங்குபவர்களுக்கு டாய்லெட் பேப்பர் பரிசு பொருளாக பேக் செய்யப்பட்டு மது பாட்டிலுடன் வீட்டு வாசலுக்கு கொண்டுவந்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment