செவ்வாய் கிரக விண்கலம் : இன்று சோதனை ஒத்திகை
ஸ்ரீஹரி கோட்டா: செவ்வாய்கிரகத்திற்கு அனுப்ப தயாராக உள்ள விண்கலத்தின் சோதனை ஒட்டம் இன்றுநடைபெற உள்ளது. இந்த ஒத்திகையின் போது விண்ணில் செலுத்தும் பட்டனை அழுத்துவதை தவிர மற்ற அனைத்து சோதனைகளும் ஒத்திகை நடத்தி பார்க்கப்படும்.
நவம்பர் 5-ல் செலுத்த முடிவு:@@ இந்த ஒத்திகை திட்டம் குறித்து பி..எஸ்.எல்.வி.சி-25 திட்ட இயக்குனர் குன்னி கிருஷ்ணன் கூறியதாவது:செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காகஇஸ்ரோ விண்வெளி மூலம்உருவாக்கப்பட்ட மங்கலயான் செயற்கை கோள் நவம்பர் 5-ம் தேதி மதியம் 2.39 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-25 ராக்கெட் மூலம்விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 56.30 மணி நேர கவுன்டவுண் நவம்பர் மாதம் 3-ம் தேதி காலை 6மணி 8நிமிடத்தில் துவங்குகிறது.இதற்கான இறுதி கட்ட பணிகள் ஸ்ரீஹரிஹோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
ராதாகிருஷ்ணன் பேட்டி: @@மங்கல்யான் பயணம் குறித்து இஸ்ரோதலைவர் கூறுகையில் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் செலுத்துவதால் மற்ற பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விட இந்த ராக்கெட் 2 ஆயிரத்து 657 வினாடி நேரம்பயணி்க்கும் திறன் கொண்டவை. இந்த ராக்கெட்டில் நான்கு நிலைகள் உள்ளன. விண்ணில் பறக்கும் நேரத்தில் இதன் எடை 320 டன்னாக இருக்கும்.தொடர்ந்து பயணித்து வரும் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் சுற்றுப்பாதையி்ல் நிலைநிறுத்தப்படும்.
மேலும் செவ்வாய் கிரகத்தி்ல் இருப்பதாக கருதப்படும் மீத்தேன் வாயு,கனிமவளத்தை கண்டறியதெர்மல் இன் பிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர், வளிமண்டலத்தை ஆய்வு செய் லிமான் ஆல்பா போட்டோ மீ்ட்டர், போன்றவை அனுப்பப்பட உள்ளன. மேலும் மங்கல்யான் செயற்கை கோளிலிருந்துசிக்னல்களை பெறுவதற்காக போர்ட்பிளேர், புருனே, பெய்க் ஆகிய இடங்களில் டெலிமெட்ரிரிசீவர்களும் தென் பசிபிக் கடல்பகுதியில்2 கப்பல்களில் ரிசீவர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
வேற்று கிரகத்திற்கு அனுப்பும் திட்டத்தின் முதல்படியாகஇந்த மங்கல்யான் திட்டம் வெற்றி பெற்றால்இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாக அமையக்கூடும்.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும்செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காகஅனுப்பப்பட்டுள்ள 51 திட்டங்களில் 21 திட்டங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மங்கல்யான் திட்ட இயக்குனர் அருணன் கூறுகையில் சந்திரயானில்நடைபெற்ற தவறுகள் இதில் இடம் பெறாத வகையில் மிக கவனமுடன்விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாககூறினார்.
No comments:
Post a Comment