Search This Blog

Monday, 7 October 2013

அமெரிக்க நிதிநெருக்கடி தொடரும் அபாயம்

அமெரிக்க நிதிநெருக்கடி தொடரும் அபாயம்

வாஷிங்டன்: செலவின மசோதா, அமெரிக்கபார்லி.,யில் நிறைவேறாதன் காரணமாக அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி இன்னும் பல வாரங்கள் தொடரும் என அஞ்சப்படுகிறது. ஷட்டவுன் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகிவிட்ட நிலையில், மசோதாவை நிறைவேற்ற உதவும்படி அதிபரும், ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் குடியரசு கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து குடியரசு கட்சியின் டெக்சாஸ் மாநில செனட் உறுப்பினர் ஜான் கார்ன் கூறுகையில், அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாவை அனுமதிப்பது குறித்து உடனடியாக அதிபருக்கு உறுதி எதுவும் அளிக்க முடியாது. அம்மசோதா நிறைவேற பல நிபந்னைகள் உள்ளன, என்றார்.
இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் எடுத்த சமீபத்திய ஆய்வில், செலவின மசோதா விஷயத்தில் குடியரசு கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவிப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment