Search This Blog

Monday, 7 October 2013

மனைவியை எரித்து கொன்ற வழக்கு ; காங்., பிரமுகர் தூக்கு ரத்து ஆனது

மனைவியை எரித்து கொன்ற வழக்கு ; காங்., பிரமுகர் தூக்கு ரத்து ஆனது

புதுடில்லி: டில்லியில் மனைவியை எரித்து கொன்ற வழக்கில்இளைஞர் காங்., முன்னாள் தலைவர் மீதான மரணத்தண்டனை இன்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
டில்லியை கலக்கிய தந்தூரி கொலை வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மத்திய டில்லியில், கடந்த 1995-ம் ஆண்டு, ஜூலை மாதம்முன்னாள் இளைஞர் காங். தலைவர் சுஷில்ஷர்மா என்பவர், தனது மனைவி நைனா ஷகானியை, துப்பாக்கியால் சுட்டு கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி அடுப்பில் வேக வைத்து எரித்தார். தந்தூரி கொலை எனப்படும் இந்த வழக்கில், 2002-ல் விசாரணை கோர்ட் குற்றவாளி என அறிவித்தது. 2007-ல் டில்லி ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சுஷில்ஷர்மா அப்பீல் செய்தார். இந்த வழக்கினை நீதிபதி சதாசிவம், விசாரித்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு இறுதி வந்தது. இதில் சுஷில் ஷர்மாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

கள்ளக்காதல் வைத்திருந்ததால் மனைவியை சர்மா கொன்றார் என விசாரணையில் தெரிய வந்தது.

No comments:

Post a Comment