ஆஸி., தீ அணைப்பு விமானம் விபத்து
சிட்னி: ஆஸ்திரேலியாவின், நியூசவுத்வேல்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. வீடுகள், பொருட்கள் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமான தீ அணைப்பு வீரர்கள், தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், ஆஸி. புறநகர் தீ அணைப்பு பிரிவின் சார்பாக, வானத்தில் இருந்து விமானம் மூலம்தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விமானம் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் சிட்னி பகுதியில், புகை மூட்டத்தில் சிக்கி விபத்தில் சிக்கி, நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி பலியானார்.
No comments:
Post a Comment