' மோடி மேஜிக் '- மிக்சர் தயார், தயார் ; நமோ , நமோ என மணம் பரப்புகிறது
நியூஜெர்ஸி: மோடி பிரதமர் வேட்பாளர் ஆன நாள் முதல் மோடியை குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டு வந்தது என்றால் இப்போது அமெரிக்காவிலும் அவரது புகழ் கொடி கட்டி பறக்க துவங்கியிருக்கிறது. தேர்தல் முடியும் வரை இவரது பெயரில் மிக்சர் தயார் செய்து தீபாவளி முதல் விற்பனை துவங்கியிருக்கிறது.
நியூ ஜெர்ஸி சிட்டியில் நியூயார்க் அவென்யூவில் ராஜ்போக் சுவீட்ஸ் என ஒரு பிரபல ஸ்வீட்ஸ் கடை நடந்து வருகிறது . இங்கு தரம் வாய்ந்த கடலை, பயறு வகைகள், கடலை மாவு கலந்து சற்று காரம் தூக்கலாக மொறு, மொறு மிக்சர் தயார் செய்துள்ளது. ' மோடி மேஜிக் ' நம்கீன் மிக்ஸ் என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனர் அரவிந்த் பட்டேல் கூறுகையில்: குஜராத்தில் மோடி 3 வது முறையாக முதல்வராக பதவியேற்ற காலத்தில் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை விளக்கும் விதமாக நாங்கள் 11 வகையான இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மோடி பிரதம வேட்பாளராக ஆகியிருப்பதால் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என கருதினேன். எனக்கு இந்த ஐடியா வந்தது. இதனையடுத்து ' மோடி மேஜிக் 'மிக்சர் தயாரித்துள்ளோம்.
இது தீபாவளி முதல் இனி வரும் பண்டிகைகளிலும், மற்றும் பா.ஜ.,தரப்பில் அமெரிக்காவில் நடக்கும் விழாக்களிலும் இலவசமாக வழங்கவிருக்கிறோம். இலவசமாக 10 லட்சம் பாக்கெட்டுகள் விநியோகிக்கவுள்ளோம். இதற்கென 45 ஆயிரம் டாலர் வரை செலவாகும். மோடியின் வீராவேச பேச்சு, மற்றும் அவரது செயல்திறம், வித்தியாச கோணம் என்னை மிகவும் கவர்ந்தது என்றும் அரவிந்த் கூறுகிறார்
இந்த மிக்சர் பாக்கெட்டில் ந மோ ந மோ ந மோ. ந மோ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விற்பனை படுஜோராக இருக்கிறதாம். இந்திய அரசியல் தலைவர்களில் வெளிநாடுகளிலும் புகழ் பரப்பபடுவது என்ற பெருமை மோடிக்கே கிடைத்துள்ளது. இது மேஜிக் அல்ல உண்மை.
No comments:
Post a Comment