லேப்டாப்பே தரலை... ஆனால் தந்ததாக பதிவு.. மாணவர்கள் குமுறல்
நாகர்கோவில்: அரசு வழங்கும் இலவச லேப்டாப்பைத் தராமலேயே, தந்ததாக சான்றிதழில் பதிவு செய்வதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளு்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரியில் படிக்கின்றன மாணவ, மாணவிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.
இதனால் அவர்கள் கல்வி துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சந்தித்து மனு கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பெண் பட்டியலில் லேப்டாப் வழங்கியதாக பதிவு செய்து விடுகின்றனர். இதனால் இந்த விஷயத்தில் குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டிலும் பல்வேறு பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகளி் சுய நிதி பிரிவு மாணவர்களுக்கு அவ்வாறு வழங்கவில்லை. இது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில், 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியிலில் பின்பக்கத்தில் தமிழக அரசின் லேப்டாப் பெற்று விட்டதாக பதிவு செய்துள்ளனர். ஆனால் பி்ன்னர் எங்களுக்கு லேப்டாப்பை தர மறுக்கின்றனர். வேறு பள்ளிகளில் எங்களை போன்ற சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்ப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment