புது மனைவியின் கைப் பைக்குள் சிகரெட்டுக்கள்: கணவன் உடன் விவாகரத்து
புகை நமக்கு பகை என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பற்றவைக்காமல் கிடக்கும் சிகரெட் கூட விவாகரத்து அளவுக்கு கணவன்-மனைவிக்கிடையே பகையை மூட்டியுள்ள சம்பவம் சவுதி அரேபியாவில் அரங்கேறியுள்ளது.
சவுதி அரேபியாவில் வாழும் பெண்களில் 10 சதவீதம் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், ´புகை நமக்கு பகை´ என்ற கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வந்த ஒரு வாலிபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்தார்.
சில தினங்களுக்கு முன்பு எதேச்சையா மனைவியின் கைப்பையை திறந்து பார்த்த அவர், உள்ளே ஒரு சிகரெட் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
கணவன் – மனைவியின் உறவுக்கிடையில் பற்ற வைக்காமலேயே புகைச்சல் பரவ தொடங்கியது. தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் அறவே கிடையாது. அந்த சிகரெட் எப்படி என் கைப்பைக்குள் வந்தது என்று என மனைவி சாதித்தார்.
´உனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால்… சிகரெட் பிடிக்கும் எந்த ஆணுடனாவது பழக்கம் வைத்திருக்கிறாயா?´ என்று அந்த பெண்ணை இம்சித்த கணவன் தற்போது விவாகரத்து கேட்ட விண்ணப்பித்துள்ளார்.
மனைவி வீட்டார் மற்றும் தனது பெற்றோர், உறவினர் என யாருடைய அறிவுரையையும் ஏற்க விரும்பாத அவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றே தீருவது என்ற முடிவுடன் ஒற்றைக்காலில் நிற்கிறார்.
கணவனின் புகை பழக்கத்தை விரும்பாத மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து பெறலாம் என்ற சவுதி சட்டத்தை மேற்கோள் காட்டி, ´என் மனைவிக்கு புகை பழக்கம் இருப்பதால் எனக்கு விவாகரத்து பெற்று தாருங்கள்´ என அவர் முறையீடு செய்துள்ளார்.
No comments:
Post a Comment