11.12.13ல் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டும் ஜோடிகள்
மும்பை :
ஒத்த எண்களைக் கொண்ட 10.10.10,11.11.11,12.12.12க்குப் பிறகு இந்த நூற்றாண்டின் இறுதி சிறப்பு நாளாக வருவது இன்னும் இரு தினங்களில் வரவிருக்கும் 11.12.13 என்ற தொடர் எண்ணினைக் கொண்ட தினமாகும். ஒத்த எண்கள் கொண்ட தினத்தில் உலகெங்கும் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். அதுபோல் வரும் 11 ஆம் தேதியிலும் தங்கள் திருமணத்தை நடத்த பல ஜோடிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.
மும்பை நகரத்தில் உள்ள ஏராளமான மன்றங்கள் இந்த நாளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. லக்னோ நகரில் 3,000 திருமணங்கள் இந்தத் தேதியில் நடைபெற இருப்பதாக திருமண ஏற்பாடுகளைச் செய்வோர் தெரிவித்துள்ளனர். திருமண அழைப்பிதழ்களை அச்சிடும் ஜோவாகுவிம் டிசோசா எப்போதும்போல் இந்தத் சிறப்புத் தேதிக்கும் அழைப்பிதழ்கள் அச்சிடும் ஆர்டர் தனக்கு அதிகம் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றார்.
7.7.7லிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சிறப்புத் தேதிகளில் திருமணங்கள் நடைபெறத் தொடங்கிவிட்டன என்று அவர் தெரிவித்தார். எண்கணித சோதிடம் பார்க்கும் கனிகா கட்வானி இந்தத் தேதி காதல் மற்றும் அன்பைப் பிரதிபலிப்பதாகக் கூறுகின்றார். பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 2 என்று வருபவர்களும், பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 என்று வருபவர்களும் இந்தத் தேதியினால் பயனடைவார்கள் என்று தெரிவிக்கின்றார். ஆயினும், தங்கள் திருமணத்தேதி ஒரு சிறப்பம்சத்துடன் இருக்கவேண்டும் என்று கருதுபவர்கள் நாளின் தன்மை குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை.தங்கள் திருமணத்திற்கு முன்னால் இந்த நாளுக்கான சிறப்பு பரிகார பூஜை ஒன்றை மணப்பெண் செய்யவுள்ளதாக தாதரைச் சேர்ந்த ஸ்ரேயா வட்கரின் வருங்காலக் கணவரான மம்தா இப்ராம்புர்கர் கூறினார்.
பல குடும்பத்தினரும் திருமண ஜோடிகளின் விருப்பத்தை ஏற்று நாளின் தன்மை குறித்து பெரிதும் யோசிக்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர். லக்னோவைச் சேர்ந்த தேவேஷ்கர் என்ற வர்த்தகர் தன்னுடைய திருமணம் 10.11.12 என்ற தேதியில் நடைபெற்றது என்றும், இப்போது தனது சகோதரரின் திருமணத்தை 11.12.13 என்ற தேதியில் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாகப் பணிபுரியும் மனு படியா தன்னுடைய வருங்கால மனைவியின் பெயரும் மனு என்றும் இத்துடன் 11.12.13 என்ற தங்களின் திருமணத் தேதியும் சிறப்பு சேர்க்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment