கூடங்குளம் அனுமிண் நிலையத்திற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு : மத்திய-தமிழக அரசுகள், அனுசக்தி கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கூடங்குளம் அனுமிண் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அனுமிண்நிலையம் துவக்கபடுவதற்கு முன்னர் 15 பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த விதிமுறைகளை செயல்படுத்தாமல் கூடங்குளம் அனுமிண் நிலையம் இயங்கியதாக பூவுலக நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கூடங்குளம் அனுமிண் நிலையம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பாதுகாப்பு விதிமுறைகளை அலட்சிய படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமிண் நிலைய கழிவுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விதிகளுக்கு புறம்பாக கடற்கரையிலேயே கழிவுகளை கலக்க படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தவில்லை என்றும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய – தமிழக அரசுகள், இந்திய அனுசக்தி கழகம், கூடங்குளம் அனுமிண்நிலையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment