15 வயது சிறுவனுடன் செக்ஸ் உறவு கொண்ட 25 வயது ஆசிரியை கைது
15 வயது சிறுவன் ஒருவனுக்கு வீட்டிற்கு வந்து பாடம் சொல்லிக்கொடுத்த 25 வயது ஆசிரியை ஒருவர், அந்த சிறுவனுடன் இரண்டு செக்ஸ் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள Montgomery பகுதியை சேர்ந்த ஆசிரியை Yee Tak Sharon Kui ஆவார். இவர் The Frost School என்ற பள்ளியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதுபோக மீதி நேரத்தில் ஒரு சில மாணவர்களின் வீட்டுக்கு சென்று தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுப்பார். இந்நிலையில் Silver Spring என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த 15 வயது சிறுவனுக்கு கணக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுவனுடன் காதல் கொண்ட ஆசிரியை, அவனுக்கு ஆசைவார்த்தை கூறி அவனுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது.
இந்த செக்ஸ் உறவை சிறுவனின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்ததனர். உடனே அவர்கள் பொலிஸுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து ஆசிரியை Tak Sharon Kuiஐ கைது செய்தனர். விசாரணையில் சிறுவனுடன் செக்ஸ் உறவு வைத்ததை ஆசிரியை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் தனக்காக யாரும் வழக்காட வேண்டாம் என்றும் நான் செய்த தவறை ஒப்புக்கொண்டு தண்டனை பெற தயாராக இருப்பதாகவும் Tak Sharon Kui நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் Tak Sharon Kuiஐ பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment