எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள்
நாகர்கோவில்: அகில இந்திய ஒதுக் கீட்டின் கீழ் வரும் மாநிலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கீழ் வருகின்ற மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான 15% ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 2014ம் ஆண்டுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அடுத்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுபற்றிய விவரம் அறிந்து கொள்ள www.aipmt.nic.in என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment