அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை : அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்தி தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடியே 25 லட்சமும், செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடியும், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடியே 25 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல் திருச்சி, பரமக்குடி, திருமங்கலம், திருச்செந்தூர், பொள்ளாச்சி உள்பட 16 மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்த ரூ.8 கோடி என மொத்தம் ரூ.20 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment