Search This Blog

Friday, 27 December 2013

புத்தாண்டு தினத்தில் வைர கிரீடத்தில் ஜொலிக்கப் போகும் மதுரை மீனாட்சி

புத்தாண்டு தினத்தில் வைர கிரீடத்தில் ஜொலிக்கப் போகும் மதுரை மீனாட்சி

மதுரை: புத்தாண்டு தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடமும், சுந்தரேஸ்வர்ருக்கு வைரப்பட்டையும் அணிவிக்கப்படும் என கோவில் தக்கார் கூறியுள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கோவிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. மார்கழி மாதம் அதிகாலை நடை திறந்து, 12 மணிக்கு அடைக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் கூட்டம் காரணமாக நடை அடைக்க தாமதமாகிறது.
இலவச தரிசனம் செய்யும் வழியில் கூட்டம் அதிகமாக இருந்தால், சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நிறுத்தி, இலவச தரிசன பக்தர்களை இரு வழிகளிலும் விரைவாக தரிசனம் செய்ய வைக்கிறோம்.
வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு அன்று கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பூ அலங்காரம் செய்யப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வைரக் கிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும்.
800 ஆண்டுகள் பழமையான ராஜகோபுரத்தில் மின்னல் தாக்கியதில் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. கோபுரத்தில் கொம்பு போன்ற பகுதியில் இடி, மின்னலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கருங்காலி கட்டை வைத்து பூச்சு வேலை செய்யப்படும். கோபுர மேற்பகுதியிலேயே சாரம் அமைக்கும் வண்ணம், கம்புகளை வைக்க ஓட்டை போன்ற அமைப்பு உள்ளது. இதனால் மேலேயே சாரம் கட்டி வேலை நடந்து வருகிறது. 20 நாட்களுக்குள் பணிகள் நிறைவு பெறும்.
மேலும் தற்போது உள்ள இடிதாங்கியை விட, இன்னும் மேன்மையான இடிதாக்கி உள்ளதா என்று பல்வேறு கம்பெனிகளிடம் கேட்டு வருகிறோம். அதன்படி பெரிய அளவில் இடி, மின்னலை தாங்கும், நவீன இடிதாங்கியை குறித்த விவரங்களை சேகரித்துள்ளோம். அதி நவீன இடிதாங்கி விரைவில் அமைக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment