Search This Blog

Wednesday, 11 December 2013

சிலிண்டர் விலை ரூ.4 உயர்ந்தது…

சிலிண்டர் விலை ரூ.4 உயர்ந்தது…

புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையில் சிலிண்டருக்கு ரூ.3.46 உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு, டீலர்களின் கமிஷன் தொகையை 9 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியதால் அதை ஈடுசெய்ய காஸ் சிலிண்டர் விலையும் நேற்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண் டர் சப்ளை செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையை 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு ரூ.3.46 உயர்த்தப்பட்டது. இதனால், கமிஷன் தொகை ரூ.40.71 ஆக அதிகரித்துள்ளது. இந்த செலவை ஈடுகட்டும் வகையில் பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் சிலிண்டர் விலையில் அதே அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீலர்களுக்கு உயர்த்தப்பட்ட கமிஷன், பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் சிலிண்டர்களின் விலை உயர்வு ஆகிய இரண்டும் உடனடியாக நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் சமையல் எரிவாயு (14.2 கிலோ) சிலிண்டர் விலை ஸி410.50. இந்த விலை உயர்வுக்கு பிறகு ரூ.413.96 ஆக அதிகரித்துள்ளது.இதற்கு முன்பு, கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி டீலர் கமிஷன் தொகை சிலிண்டருக்கு ரூ.11.42 உயர்த்தப்பட்டது. டீலர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை ரூ.25.83ல் இருந்து ரூ.37.25 ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் சிலிண்டர் விலையும் ரூ.399ல் இருந்து ரூ.410.50 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல், 5 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கான டீலர் கமிஷன் தொகையும் ரூ.13.30ல் இருந்து ரூ.18.63 ஆக உயர்த்தப்பட்டது..
சிலிண்டர்கள் சப்ளை செய்யும் டீலர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அதிகரிக்கும் செலவுகள், ஊதிய உயர்வு காரணமாக, ஆண்டுதோறும் டீலர் கமிஷனை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கமிஷன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.இருப்பினும், மானியம் இல்லாத 14.2 கிலோ எடையுள்ள கூடுதல் சிலிண்டர் சப்ளை செய்வதற்கான கமிஷன் தொகையில் கூடுதலாக 0.75 பைசா கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த தொகை, கமிஷன் தொகையான ரூ.40.71விட அதிகம் என்பதால், அதில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. டெல்லியில் மானியம் இல்லாத சமை யல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,017.50 ஆக உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யும் டீலர்களின் கமிஷன் தொகை ஆண்டுதோறும் உயர்த்தப்படுவதால், கடந்த 6 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு ரூ.16.71 ஆக இருந்தது. அந்த தொகை ரூ.19.05 ஆக அதிகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2008) ஜூன் 4ம் தேதி ரூ.20.54 ஆகவும் 2009 ஜூன் 30ம் தேதி ரூ.21.94 ஆகவும் 2011 ஜூலை 1ம் தேதி ரூ.25.83 ஆகவும் உயர்த்தப்பட்டது.

No comments:

Post a Comment