கடல் தொடர்ந்து சீற்றம்: கடலூர், புதுச்சத்திரம் மீனவர்கள் 7–வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
புவனகிரி :
வங்க கடலில் உருவாகியுள்ள ‘மாதி’ புயலால் கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூர் ‘சில்வர் பீச்’சில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவுக்குள் கடல்நீர் புகுந்து தேங்கியது. இதனால் சிறுவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக விளையாட முடியாமல் தவித்தனர்.
கடலூர், புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 5 ஆயிரம் படகுகள் கரையோரமாக ஓய்வெடுக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே கடலூர், புதுச்சத்திரம் பகுதி மீனவர்கள் தொடர்ந்து 7–வது நாளாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
No comments:
Post a Comment