குடியரசு தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட்டில் 24ம் தேதி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஏர்போர்ட்டுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பு விமானங்களை கடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளி யானது. இந்நிலையில் சென்னை ஏர்போர்ட்டில் நேற்று அதிகாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையா ளர் வருகைக்கு நேற்று அதிகாலை 1 மணி முதல் வரும் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் நுழைவு வாயிலிலேயே நிறுத்தி சோதனையிடப்படுகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஏர்போர்ட் வளாகத் தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏர்போர்ட் நுழை வாயில் மற்றும் விமான ஓடுதளம் அருகிலும் துப்பாக்கி ஏந்திய போலீ சார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். ஏர்போர்ட் முழுவதும் நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டு தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழக்கமாக 3 கட்ட சோதனை நடத்தப்படும். அதன்பின்னரே அவர்கள் விமானத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஆனால், நேற்று முதல் அது 5 கட்ட சோதனையாக மாற்றப்பட்டுள் ளது. ஏர்போர்ட்டில் வழக்கமாக உள்ள 3 அடுக்கு பாதுகாப்பு, நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பாகவும், 24ம் தேதி முதல் 7 அடுக்கு பாதுகாப்பாகவும் உயர்த்தப்படுகிறது. இதற்காக கூடுதலாக 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அவர்களது பணி நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment