மதுரை அருகே கோர விபத்து - நான்குபேர் பலி!
மதுரை: மதுரை அருகே இருசக்கர வாகனமும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மதுரை அருகேயுள்ள செக்கானுரனி பகுதியை சேர்ந்த கார்த்திக், விஜி, முத்துகுமார், ராஜகுரு ஆகியோர் ஒரு இருசக்கர வாகனத்தில் செக்கானுரனியிலிருந்து சோழ வந்தான் சென்றுள்ளனர் அப்போது இவர்கள் நான்கு நபர்களும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த மற்ற இருவரை பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கும் முன்பே உயிரிழந்துள்ளனர்.
ஒரே வாகனத்தில் சென்ற 4 நண்பர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
No comments:
Post a Comment