Search This Blog

Thursday, 9 January 2014

பெங்களூர்: 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - வேன் டிரைவர் கைது

பெங்களூர்: 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - வேன் டிரைவர் கைது

பெங்களூர்: பெங்களூருவில் 3 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேன் டிரைவடிரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெங்களூவ் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேவரபீசனஹள்ளியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி விமலா. கைகொண்டனஹள்ளியில் உள்ள நர்சரி பள்ளியில் விமலாவை, அவளது பெற்றோர் சேர்ந்திருந்தனர்.
பள்ளிக்குச் சொந்தமான வேனில் விமலா சென்று வருவது வழக்கம்.
அதுபோல, கடந்த 7-ந் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய விமலா, மிகவும் சோர்வாக காணப்பட்டாள். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றார்கள்.
அப்போது சிறுமி, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதை அறிந்து பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதுபற்றி எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், பள்ளி வேன் டிரைவர் சீனிவாஸ், ராதிகாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சீனிவாசை வியாழக்கிழமையன்று போலீசார் கைது செய்தார்கள். விசாரணைக்கு பின்பு அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment