Search This Blog

Monday, 27 January 2014

டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மிரட்டிய 17 வயது சிறுவன்

டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மிரட்டிய 17 வயது சிறுவன்

டெல்லி: டெல்லியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
தெற்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 6 வயது சிறுமியிடம் நைசாகப் பேசி அவரை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளான். மாடியில் வைத்து அவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இதை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று மிரட்டியுள்ளான்.
வீட்டுக்கு வந்த சிறுமி தனது குடும்பத்தாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
முன்னதாக மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment