Search This Blog

Tuesday, 28 January 2014

டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு

டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு

புதுடெல்லியில் 28 வயது இளம் பெண் தனது ஆண் நண்பரால் ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பெண் ஆனந்த் வீர் பஸ் நிலையம் அருகே சாலை ஓரத்தில் இருந்து அழுதுள்ளார்.

அப்போது அவர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பெண் தன்னை நண்பர் ஒருவர் ஓடும் காரில் கற்பழித்துவிட்டார் என்று கூறியுள்ளார். இரண்டு நண்பர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தான் மறுத்த போது என்னை வாலிபர்கள் அடித்து,உதைத்தனர் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment