Search This Blog

Wednesday, 5 February 2014

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. நேர்காணல் அல்லாத 1,262 பதவிகளுக்கு தேர்வு எழுதியவர்களை தேர்ந்து எடுப்பதற்காக முதல் கட்ட கலந்தாய்விற்கு பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி கலந்¢தாய்வு 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னையில் பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment