ஊராட்சிகளில் சுகாதார நிலையங்கள்
சிவகாசி:சிவகாசி சட்டசபை தொகுதியில், ஐந்து ஊராட்சிகளில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவக்கப்பட்டன. சிவகாசியில் ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், கிருஷ்ணபேரி ஊராட்சிகள், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் செவல்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் வன்னியம்பட்டி, ராஜபாளையம் ஒன்றியத்தில் தளவாய்புரம் ஊராட்சியில், ஆரம்ப சுகாதார நிலையங்களை, முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.இதை தொடர்ந்து நேற்று, சித்துராஜபுரம் முதல் நிலை ஊராட்சியில், ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழா நடந்தது. ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினார். சித்துராஜபுரம் ஊராட்சி தலைவர் சுப்புராஜ் வரவேற்றார். ஒன்றிய துணைத் தலைவர் சுப்பிரமணியம், விஸ்வநத்தம் கூட்டுறவு சங்க தலைவர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிலிப்வாசு, பெரியசாமி, கூட்டுறவு பால் சங்க தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டனர். ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், விஸ்வநத்தம், கிருஷ்ணபேரியிலும், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் குத்துவிளக்கேற்றினர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் புறநோயாளிகள் பிரிவு, தினமும் பகல் 12 மணிவரை செயல்படும். 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ பணியாளர்கள் இருப்பர். தலா ஒரு டாக்டர், ஸ்டாப் நர்ஸ், மருந்தாளுனர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர் என, ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment