பட்டு வாரியத்தில் பணிகள்
சென்ட்ரல் சில்க் போர்டு எனப்படும் மத்திய பட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் நமது அருகிலுள்ள மா நிலமான பெங்களூருவின் மடி வாலா பகுதியில் உள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: சயின்டிஸ்ட் - பி பிரிவில் 65ம், இன்ஸ்பெக்டர் - சில்க் பிரிவில் 4ம், அஸிஸ்டெண்ட் டெக்னிகல் பிரிவில் 6ம், உயர் நிலை எழுத்தர் பிரிவில் 6ம், பீல்டு அஸிஸ்டென்ட் பிரிவில் 112ம் காலியிடங்கள் உள்ளன. இதர பிரிவுகளில் சொற்ப எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: சயின்டிஸ்ட் பதவிக்கு அறிவியல் புலத்தில் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது விவசாயத்தில் முது நிலைப் பட்டப் படிப்பு தேவைப்படும். அப்பர் டிவிஷன் கிளார்க் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்புடன் ஆங்கில டைப்பிங் திறன் தேவைப்படும். பீல்டு அஸிஸ்டெண்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது செரிகல்சர் பிரிவில் டிப்ளமோ படிப்பு தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை எடுத்து புகைப்படம் உள்ளிட்ட முக்கிய இதர இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Member-Secretary, Central Silk Boad, Ministry of Textiles, Govern of India, Hosur Road, B.T.M Layout, Madiwala, Bangalore-560 068.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.03.2014
இணையதள முகவரி: www.csb.gov.in/job-opportunities/advt-no-csb-2-2014/ <http://www.csb.gov.in/job-opportunities/advt-no-csb-2-2014/>
No comments:
Post a Comment