ஓட்டப்பிடாரம் அருகே போலீஸ்– பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை எம்.கே.என்.தொடக்கப்பள்ளி மற்றும் மனோ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் போலீஸ்–பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்தது. போட்டிக்கு பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர் செந்தூர்பாண்டி தலைமை தாங்கினார். போட்டியை பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லிங்கதிருமாறன் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சில்லாங்குளம் முத்துகருப்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியார் ஜெயக்கொடி, பஞ்சாயத்து தலைவர்கள் மாரியப்பன்(நாகம்பட்டி), ராஜகோபால்(கன்னக்கட்டை), அண்ணாமலை(குதிரைக்குளம்), பசுவந்தனை வியாபாரிகள் சங்க தலைவர் காந்திரெட்டியார், பசுவந்தனை கிராம தலைவர் பரமசிவன், மீனாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சத்தியமூர்த்தி, பொம்மையாபுரம் பால் கூட்டுறவு சங்க தலைவர் வீரபுத்திரன், நாகம்பட்டி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், போத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பசுவந்தனை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பொன்முனியசாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment