Search This Blog

Wednesday, 5 March 2014

மீனவர்கள் பிரச்னை: சிறைபிடிக்கப்பட்ட 11 பேர் விடுவிப்பு

மீனவர்கள் பிரச்னை: சிறைபிடிக்கப்பட்ட 11 பேர் விடுவிப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகு மீனவர்கள் 11 பேரை விடுவிக்கப்பட்டனர். விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தூத்துக்குடியில் மீன் பிடிக்கும் எல்கை தகராறில் விதிகளை மீறியதால் பெரியதாழை பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. விசைப்படகுகள் 30 கடல்மைல்களுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க வேண்டும். பெரியதாழை பகுதியில் தூத்துக்குடியை சேர்ந்த டேவிட் என்பவருக்கு சொந்தமான தேவமாதா விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனை அப்பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் அதில் இருந்த 11 மீனவர்களை சிறைப்பிடித்தனர். தேவமாதா படகினை தீவைத்து கொளுத்தினர். இதில் சிறைப்பிடிக்கப்பட்ட கீழ வைப்பாறு பகுதி ரவி, தருவைக்குளம் பகுதி சுதாகர்,கரிக்குளம் பகுதி ராஜேந்திரன், மூனுசாமி, தூத்துக்குடியை சேர்ந்த காஞ்சிஸ்பிரேட்,பெனிஸ்கர்,ஜான்சன், அசோக், புன்னக்காயல் ராஜன்,முக்காணி நிவாஸ் ஆகியோரை, விடுவித்தனர். இந்த பிரச்னையில் விசைப்படகு தீவைத்து கொளுத்தப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். விசைப்படகு சங்க நிர்வாகிகள் கூறுகையில்,"" இந்த பிரச்னையில் விசைப்படகு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது," என்றனர். மீன் வளத்துறை அதிகாரிகள் சமரசம் பேசி வருகின்றனர்.

No comments:

Post a Comment