Search This Blog

Wednesday, 5 March 2014

மகளை கொன்று புதைத்த தாய் கள்ளக்காதலனுடன் கைது

மகளை கொன்று புதைத்த தாய் கள்ளக்காதலனுடன் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, தாய் தனது மகளை கொலை செய்து, எரித்து புதைத்தனர். ஏழு மாதங்களுக்குப்பின் துப்பு துலங்கியதில் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளங்கிணற்றைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் தர்மலிங்கம், 34. இவர் கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். 2011 ல் அதே பகுதியில் உள்ள ஆதிநாராயணன் மனைவி துளசி,35, என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. துளசி தனது மகள் கிருத்திகா,9 , அழைத்துக்கொண்டு தர்மலிங்கத்துடன் ஊரை விட்டு ஓடி வந்து விட்டனர். இது குறித்து துடியலூர் போலீசில் ஆதி நாராயணன் மனைவி, மகளை காணவில்லை, என புகார் தெரிவித்தார். தர்மலிங்கம் துளசியும் சேர்ந்து துடியலூரிலேயே வேறு பகுதியில் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந் நிலையில் தர்மலிங்கத்திற்கும் வாலவல்லானை சேர்ந்த வேறு ஒரு பெண்ணிற்கும் சாத்தான்குளம் பள்ளங்கிணற்றில் திருமணம் நடந்தது.பின் மனைவியையும், கள்ளக்காதலி துளசியையும் துடியலூர் பகுதியில் இரு வேறு இடங்களில், குடியமர்த்தி இருவருடனும் தர்மலிங்கம் வாழ்ந்து வந்தார். இந் நிலையில் துளசிக்கு தர்மலிங்கம் வேறு திருமணம் செய்தது தெரியவந்தது. கள்ளகாதலனுடன் தகராறு செய்தார். இதில் தர்மலிங்கமும், துளசியும், கிருத்திகாவையும் அழைத்துக் கொண்டு சாத்தான்குளத்திற்கு 2013 ஜூலை 14 ம் தேதி வருகை தந்தார். அங்கு கிருத்திகாவை கொலை செய்து விட்டு தர்மலிங்கமும், துளசியும் தற்கொலை செய்யும் முடிவில் இருந்தனர். அப்போது பைக்கில் மூவரும் சென்ற போது இரவில் செட்டிக்குளம் விலக்கில் இருந்து பன்னம்பாறை செல்லும் பகுதியில் கிருத்திகாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின் அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்து விட்டு அதே பகுதியில் புதைத்து விட்டு சென்றனர். பின் மனம் மாறி தாங்கள் வந்த பைக்கை திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி பகுதியில் விட்டு சென்றுவிட்டனர். மீண்டும் துடியலுருக்கு சென்று பழையபடி வாழ்க்கை நடத்தி வந்தனர் . அந்த இடத்தில் புதியதாக குழி தோண்டப்பட்டு இருந்ததால், சாத்தான்குளம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் தோண்டினர். அதில் அடையாளம் தெரியாத சிறுமியின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந் நிலையில் சில தினங்களுக்கு முன் துடியலூர் போலீசார் துளசியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கிருத்திகாவை கொலை செய்து எரித்து புதைத்து விட்டதை தெரிவித்தார். இதன் பேரில் தர்மலிங்கம், துளசியை சாத்தான்குளம் போலீசாரிடம் துடியலூர் போலீசார் ஒப்படைத்தனர். இருவரையும் சாத்தான்குளம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment